மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 43 அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

தமிழகத்தின் எல்.முருகன், காங்கிரஸிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்குப் பதவி அளிக்கப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. இன்று பதவியேற்றவர்களில், 7 பேர் பெண்கள் மற்றும் எட்டு பேர் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மெகா விரிவாக்கத்தின் மூலம் மத்திய அமைச்சரவையின் பலம் 53 என்ற எண்ணிக்கையில் இருந்து 77 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில்

அதேவேளையில், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட 7 முக்கிய அமைச்சர்களின் பதவிப்பறிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள உத்தரப் பிரதேசத்திற்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவது பாஜகவுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு இது முன்னோட்டமாகக் கருதப்படுகிறது.

மத்திய அமைச்சர்கள்:

01. நாராயண் ரானே

02. சர்பானந்தா சோனாவால்

03. விரேந்திர குமார்

04. ஜோதிராதித்யா சிந்தியா

05. ராமசந்திரா பிரசாத் சிங்

06. அஸ்வினி வைஸ்னவ்

07. பசுபதி குமார் பரஸ்

09. கிரண் ரிஜ்ஜூ

09. ராஜ்குமார் சிங்

10. ஹர்திப் சிங் புரி

11. மனுசுக் மாண்ட்வியா

12. பூபேந்தர் யாதவ்

13. பர்சோத்தம் ரூபாலா

14. கிஷன் ரெட்டி

15. அனுராக் சிங் தாகூர்

மத்திய இணை அமைச்சர்கள்:

16. பங்கஜ் சவுத்ரி

17. அனுபிரியா சிங் படேல்

18. சத்யபால் சிங் பாகேல்

19. ராஜிவ் சந்திரசேகர்

20. சுஷ்ரி சோபா கரன்தல்ஜே

21. பானுபிரதாப் சிங் வர்மா

22. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்

23. மீனாட்சி லேகி

24. அன்புர்னா தேவி

25 நாராயஸ்வாமி

26. கவுசல் கிஷோர்

27. அஜய் பட்

28. பிஎல் வர்மா

29. அஜய் குமார்

30. சவுகான் தேவ் சிங்

31. பக்வந்த் குபா

32. கபில் மோரேஸ்வர் பாட்டீல்

33. சுஷ்ரி பிரதிமா பவுமிக்

34. சுபாஷ் சர்கார்

35. பக்வந்த் கிஷன்ராவ் காரத்

36. ராஜ்குமார் ரஞ்சன் சிங்

37. பார்தி பிரவின் பவார்

38. பிஸ்வேஸ்வர் டுடு

39. சாந்தனு தாகூர்.

40. முஞ்சபரா மகேந்திரபாய்

41. ஜான் பர்லா

42. எல்.முருகன்

43. நிஷித் பிரமனிக்

இந்த மெகா விரிவாக்கம் இந்திய அரசியலில் மிகுந்த கவனமும் முக்கியத்துவமும் பெற்றுள்ளது.