கொடைக்கானல் மன்னவனூரில் மூலிகை புல்வெளிகளை பாது காக்க அந்நிய மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 2,000 ஏக்கர் பரப்பளவில் அருகம்புல் போன்ற மூலிகை புல்வெளிகள் உள்ளன. 2016-ம் ஆண்டில் வருவாய்த் துறை வசம் இருந்த மன்னவனூர் நிலம், வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சூழல் சுற்றுலாத் தலமாக அறிவிக் கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளை கவர இப்பகுதியில் உள்ள எழும்பள்ளம் ஏரியில் பரிசல் சவாரி உள்ளிட்ட பொழுதுப்போக்கு அம்சங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இங்குள்ள பசுமையான புல்வெளிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கின்றன. பரந்த புல்வெளிகள் குழந்தைகள் விளையாட ஏற்றதாக உள்ளன. மேலும் ‘டிரக்கிங்’ செல்ல பாதை, மரப்பாலம் போன்றவை அமைந்திருப்பதால் சுற்றுலாப் பய ணிகள் இங்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்போது புல்வளெி நிறைந்த பகுதியில் யூகலிப்டஸ், சவுக்கு மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக அந்நிய மரங்கள் புல்வெளிகளை ஆக்கிர மித்து வருவதால் விரைவில் மூலிகை புல்வெளிகள் அழியும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மன்னவனூர் ஏரிப் பகுதியில் உள்ள அந்நிய மரங் களை உடனடியாக அகற்ற வேண் டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் எந்தெந்த பகுதியில் அந்நிய மரங்கள் வளர்ந்துள்ளன என்பது குறித்து கணக் கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக வனப்பகுதியில் இருந்து அந்நிய மரங்கள் அகற் றப்படும் என்று கூறினர்.