தற்போது வங்கிகளில் ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் பரிவர்த்தனை செய்தவற்கு பான் கார்டு விவரங்களை இணைப்பது கட்டாயம். இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.20 லட்சம் மேல் ஒரு வங்கியிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளிலோ பணம் போடுவதற்கும் எடுப்பதற்கும் பான் எண் அல்லது ஆதார் எண் விவரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் வங்கிகளில் மற்றும் தபால் அலுவலகங்களில் புதிய கணக்குகள் திறப்பதற்கும் ஆதார் அல்லது பான் எண் அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தபால் அலுவலங்களில் ஒரு நிதி ஆண்டில் ரூ.20 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்வதற்கு பான், ஆதார் எண் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் புதிய விதி மே 26-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.