டெல்லி வரும் அல்பரெஸ், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, வர்த்தகம், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புதுமை, சுற்றுச்சூழல், கலாச்சாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றதை அடுத்து, இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயம் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக அல்பரெசின் பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.