தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக் கான திருத்திய பட்ஜெட், சட்டப் பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த பிப்.23-ம் தேதி முந்தைய அதிமுக அரசின் இடைக்கால பட் ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய் தார். திமுக ஆட்சி அமைத்த நிலையில், 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய பட்ஜெட் சென்னை கலைவாணர் அரங்கில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். மேலும் முதல்முறையாக இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் துறைக்கான தனி பட்ஜெட், 14-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

இரண்டு பட்ஜெட் மீதான விவாதம் ஆக.16 தொடங்கி 19-ம் தேதி முடிவடைகிறது. அதன்பின், ஆக.23-ம் தேதி முதல் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று ஆலோசனை நடத்தி, பட்ஜெட்டை இறுதி செய்தார்.