அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகம் நடப்பதாக திமுக தலைமை தேர்தல் ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.

திமுக வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர்கள் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் வில்லிபுத்தூரில் நடைபெற்றது. இதில் திமுக தேர்தல் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.இளங்கோ பேசியதாவது:Powered by Ad.Plus

அமைச்சர்களின் தொகுதிகளில் பணப்பட்டுவாடா மட்டுமின்றி பொருட்கள் விநியோகமும் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தற்போதைய அமைச்சரின் தொகுதியான சிவகாசியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடா நடக்கிறது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி புகார் அளிக்க உள்ளோம். அதிகாரத்தில் இருப்பவர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி முறைகேட்டில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், அதைத் தடுக்கும் முறை குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.