எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்துள்ள படம் தமிழரசன். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நேற்று இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது, விஜய் ஆண்டனி ஒரு ஆச்சர்யமான முகம். ரொம்ப சாதாரணமா இருப்பார். ஆனால் படத்தில் வேறமாதிரி இருக்கிறார். நல்ல இசை அமைப்பாளர் இப்போது நல்ல நடிகர். தமிழரசன் என்ற பெயர் ரொம்ப நல்லாயிருக்கு.

இளையராஜாவை மிஞ்சுவதற்கு இனி ஒரு இசை அமைப்பாளர் பிறந்து வந்தாலும் முடியாது. படத்தை ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தாலும் அந்தப்படத்திற்கு உயிர் கொடுத்து விடுவார் இளையராஜா. பேசாத படத்தை பேச வைத்தவர் இளையராஜா. அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் இசைக்கு ஈடு இணையில்லை.