கருப்பு பூஞ்சை
 தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் போதுமான மருந்துகள் இல்லாததால் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 921 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு – 95 சதவீதம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை

நாடு முழுவதும் உள்ள பல ஆஸ்பத்திரிகள் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கான மருந்துகள் இல்லை. இருப்பினும் அரசு ஆஸ்பத்திரிகளில் மாற்று மருந்துகள் மூலம் இந்த நோயை குணப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கருப்பு பூஞ்சை

இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு மருந்து வாங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.280.20 கோடி இதுவரை நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.