கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு, ஒரு டோஸ் தடுப்பூசி அல்லது இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு, டெல்டா வகை உருமாறிய கரோனா வைரஸை எதிர்க்கும் திறன், பாதுகாப்பு அதிகம என்று ஐசிஎம்ஆர்ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேசமயம், கரோனாவால் பாதிக்கப்படாமல், ஒரு டோஸ் அல்லது இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு டெல்டா வகை வைரஸ்களில் இருந்து பாதுகாப்பு கிடைப்பது கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு, ஒரு டோஸ் தடுப்பூசி அல்லது இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுடன் ஒப்பிடும் போது குறைவாகும்.

டெல்டா வைரஸ் வீரியமிழப்பு-கோவிஷீல்ட் தடுப்பூசி மற்றும் கரோனாவில் இருந்து மீண்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் என்ற தலைப்பில் ஐசிஎம்ஆர் ஆய்வு நடத்தியது அதில் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், “கோவிஷீல்ட் ஒரு டோஸ் செலுத்தியவர்கள், இரு டோஸ் செலுத்தியவர்கள், கரோனாவில் இருந்து மீண்டு ஒரு டோஸ் செலுத்தியவர்கள், இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், ஒரு டோஸ் அல்லது 2 டோஸ்ட் செலுத்தியபின்பும் கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் ஆகிய 5 பிரிவுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் ஒரு டோஸ் அல்லது 2 டோஸ்ட் செலுத்தியபின்பும் கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள், கரோனாவிலிருந்து மீண்டு ஒரு டோஸ் அல்லது இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டெல்டா வகை வைரஸ்களிடம் இருந்து அதிகமான பாதுகாப்பு கிடைக்கிறது.

மாறாக, கரோனா பாதிப்பு ஏற்படாமல் கோவிஷீல்ட் ஒரு டோஸ் அல்லது இரு டோஸ் செலுத்தியவர்களுக்கு டெல்டா வைரஸ்களிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பு, கரோனாவிலிருந்து மீண்டு, தடுப்பூசி செலுத்தியவர்களோடு ஒப்பிடுகையில் குறைவாகும்.

கரோனா 2-வது அலையில் டெல்டா வகை வைரஸ்களால் நோய் பரவலின் வேகம் அதிகமாக இருந்தது, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக பி.1.617 வகை வைரஸ்கள் இந்தியாவில் மிகப்பெரிய சுகாதாரப்பிரச்சினையை ஏற்படுத்தின.

அது மேலும் உருமாற்றம் பெற்று கப்பா, டெல்டா வகை வைரஸ்களாக உருமாற்றம் பெற்றன. அதிலும் டெல்டா வகை வைரஸ்கள் மற்ற உருமாற்ற வைரஸ்களைவிட அதிக வீரியம் கொண்டதாக மாறிவருகிறது.

இந்தியாவில் உருவான டெல்டா வகை வைரஸ்தான் தொற்று வேகமாகப் பரவுவதற்கு காரணமாக அமைந்தது, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல தடுப்பூசிகள் டெல்டா வைரஸின் வீரியத்தை அழிப்பதில் திறன் குறைவாக இருக்கும் நிலையில், கரோனாவிலிருந்து மீண்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டெல்டா வைரஸிலிருந்து அதிக பாதுகாப்பு கிடைக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.