புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் பல மாநிலங்களில் சீராக குறைந்து வருகின்றன.  இந்த நிலையில், இந்திய அரசு வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 19,587 கொரோனா நோயாளிகள் குணமடைந்து சென்றுள்ளனர்.  இதனையடுத்து, தேசிய குணமடைந்தோர் விகிதம் 96.36 சதவீதம் ஆக உயர்வடைந்து உள்ளது.  இது உலகில் மிக அதிக எண்ணிக்கை ஆகும் என்று தெரிவித்து உள்ளது.