இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட இன்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்துள்ளது.

இந்தியாவில் 5ஜி நெட்வொர்கிங் தொழில்நுட்பத்தை உருவாக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக இன்டெல் அறிவித்து இருக்கிறது. இன்டெல் 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் உருவாக்க ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

 ரிலையன்ஸ் ஜியோ


5ஜி தொழில்நுட்பங்களை பெற மற்ற நிறுவனங்களை சார்ந்து இருக்கும் வழிமுறையை ரிலையன்ஸ் ஜியோ பின்பற்றவில்லை. மாறாக தனக்கென சொந்தமாக 5ஜி நெட்வொர்க் உருவாக்கும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற முறையை உலகின் பல்வேறு இதர டெலிகாம் நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் மிகப்பெரிய ஒன்றாக அமைய இருக்கிறது. இதனை சாத்தியப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ ஈடு இணையற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகிறது என இன்டெல் நிறுவனத்தின் டேட்டா தளங்களுக்கான பொது மேலாளர் மற்றும் துணை தலைவர் நவீன் ஷெனாய் தெரிவித்தார்.