திருப்பத்தூர் தொகுதியில் விடுபட்ட கிராமங்களை காவிரி குடிநீர் திட்டத்தில் சேர்க்க மறுத்தது அதிமுக அரசு என திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் குற்றம்சாட்டினார்.

ஆத்தரங்கரைப்பட்டி, திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் பிரச்சாரம் செய்தார்.அவர் பேசியதாவது: திருப்பத்தூர் தொகுதியில் என்னால் முடிந்த அளவு அனைத்து பகுதிகளிலும் மக்களின் அடிப்படை தேவைகளை செய்து கொடுத்துள்ளேன். கருணாநிதி செயல்படுத்திய காவிரி குடிநீர் திட்டத்தில் திருப்பத்தூர் தொகுதி யில் பல பகுதிகள் பயனடைந்து வருகின்றன. ஆனால் சில பகுதிகள் விடுப்பட்டிருந்தன. அவற்றைச் சேர்க்க நான் பலமுறை முயன்றும் அதிமுக அரசு மறுத்துவிட்டது.

மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் விடுபட்ட பகுதிகள் அனைத்தும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைக்கப்படும். என்று பேசினார்.

திமுக ஒன்றியச் செயலாளர் சண்முகவடிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.