இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் சிவப்பு முள்ளங்கி பெரும்பங்கு வகிக்கிறது.

தேவையான பொருட்கள் :

சிவப்பு முள்ளங்கி (ராடிஷ்) – கால் கிலோ,
ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5,
புளி – சிறிதளவு, தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க

கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய்

செய்முறை:

சிவப்பு முள்ளங்கியை துருவிக்கொள்ளவும்.

காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், புளி, உப்பு, பெருங்காயத்தூள், பொட்டுக்கடலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்து, கடைசியில் துருவிய சிவப்பு முள்ளங்கியைச் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானம் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.