மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள நீலத்திமிங்கலத்தின் உடல்.

மரக்காணம் அருகே நீலத்திமிங்கலத்தின் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவர்கள் இன்று (ஜூன் 24) அதிகாலை கட்டுமரத்தில் மீன் பிடிக்க கடற்கரைக்கு சென்றனர். அப்போது, கடற்கரையோரம் அரியவகை நீலத்திமிங்கலத்தின் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி இருப்பதை கண்டனர்.

இதையடுத்து, மீனவ பஞ்சாயத்தார் மரக்காணம் போலீஸார் மற்றும் மீன்வளத்துறையினர், கால்நடைத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 50 அடி நீளமும், 20 டன் எடையும் கொண்ட இத்திமிங்கலம், கப்பலில் அடிப்பட்டு இறந்து இருக்கலாம் என்றும், காற்றின் திசை மாற்றத்தால் கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும், தற்போது கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மீன்வளத்துறையினரின் ஆய்வுக்குப் பின்பே முழுமையாக விவரம் தெரியவரும்.