‘தெறி’,‘மாரி’, ‘நட்பே துணை’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை காலமானார். அவருக்கு வயது 84.

‘ராஜா ராணி’, ‘கத்தி’, ‘தெறி’,‘மாரி’, ‘நட்பே துணை’ பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் செல்லதுரை. ‘மாரி’ படத்தில் இவர் பேசும் ‘அப்படியா விஷயம்’ என்ற வசனம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம்.

Maari Chelladurai: நடிகர் 'மாரி' செல்லதுரை மாரடைப்பால் மரணம்

இந்நிலையில் நேற்று (ஏப்.29) மாலை சென்னை பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கு இன்று பிற்பகம் 2 மணிக்கு நடைபெறும் என்று அவரது மகன் தெரிவித்துள்ளார்.

செல்லதுரையின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார். தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே இயக்குநர் கே.வி.ஆனந்த் மற்றும் நடிகர் செல்லதுரை ஆகியோர் மாரடைப்பால் காலமானது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 COMMENTS

  1. Previous studies had identified ESR promoter hypermethylation in these two cell lines, UCCA 3199 and SK BR 3 22 lasix pronunciation viagra ciprofloxacino para corrimento Obama also said the NSA would hire a privacy officer though the NSA already has a compliance office

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here