ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குறறம் சாட்டி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் தனது ட்விட்டர் பதிவில், ரஃபேல் விவகாரம் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி அதற்கு கருத்துக் கணிப்பு மூலம் மக்கள் பதிலளிக்க வசதியாக 4 பதில்களையும் பதிவிட்டுள்ளார்.

அந்தக் கேள்விக்கு பதில் களாக குற்ற உணர்ச்சி, நண்பர்களை காப்பாற்றுவது, எம்.பி. பதவியை நாடாளுமன்றக் கூட்டுக் குழு விரும்பாதது, இவை எல்லாமே என்று 4 பதில்களை மக்கள் தேர்வு செய்ய ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.