கமல் நடிக்கவுள்ள ‘விக்ரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, கமல் நடிக்கவுள்ள ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்க, படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்போதைக்கு கமலுடன் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதனை ஃபகத் பாசில் அளித்துள்ள பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ‘விக்ரம்’ படத்தில் நடிக்கத் தன்னை அணுகியிருப்பதாகவும், இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

இவர்களைத் தவிர முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க அர்ஜுன் தாஸை அணுகியுள்ளது படக்குழு. விரைவில் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் அர்ஜுன் தாஸ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.