விஜய், ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில், ஜார்ஜியா சென்று அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, முக்கிய கதாபாத்திரத்தில் அபர்ணா தாஸ் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகின்றனர். அனிருத், நெல்சன் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களை தொடர்ந்து, இப்படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல் எழுத உள்ளார். இதன்மூலம், விஜய் படத்தில் முதல்முறையாக சிவகார்த்திகேயன் தனது பங்களிப்பை அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.