Site icon Metro People

வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி +2 மாணவர்கள் மேசையை உடைத்த சம்பவம்: 10 மாணவர்கள் தற்காலிக நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு

வேலூர்: வேலூர் மாவட்டம் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்கள் வகுப்பில் உள்ள மேசையை உடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 10 மாணவர்களை தற்காலிக நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். +2-ம் மாணவர்கள் 10 பேரை மே 5-ம் தேதி வரை பணிநீக்கம் செய்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்தனர். மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடக்கூடாது ; மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் ஒழுக்கக்கேடான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வீடியோ வெளியாகி மக்களை வேதனை அடைய செய்கிறது. கடந்த வாரம் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு பள்ளியில் ரெக்கார்டு நோட்டு கேட்ட ஆசிரியரை அடிக்கப்பாயும் மாணவர்களின் வீடியோ, திருப்போரூர் அரசு பள்ளியில் பிளஸ்2 மாணவர்கள், வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது டான்ஸ் ஆடுவதும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவற்றுக்கு பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடரும் இச்சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் மாணவர்கள் மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் வேலூர் தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை பள்ளி முடிந்தும் வீட்டுக்கு செல்லாத பிளஸ்2 ‘சி’ பிரிவு மாணவர்கள், தங்கள் வகுப்பறையில் உள்ள இரும்பாலான மேசை, நாற்காலி, பென்ச்களை உடைத்து நொறுக்கினர். இதையறிந்து அங்கு வந்த ஆசிரியர்கள், அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு கூறினார். அதற்கு அந்த மாணவர்கள், ஆசிரியரை மிரட்டலாக பார்த்ததுடன் தாக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதனால் அவர்கள் பாகாயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தொரப்பாடி பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் பென்ச் உடைப்பில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமியை நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘திங்கட்கிழமை (இன்று) விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்  என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Exit mobile version