சென்னை: அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் கோடை வெப்பம் மேலும் 3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் மே 12ஆம் தேதி வரைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆங்காங்கே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 6 செமீ மழை பெய்துள்ளது. பெரியநாயக்கன்பாளையம், சோழவந்தான், திருத்தணி, தாராபுரம் நகரங்களில் தலா 5 செமீ மழை பெய்துள்ளது. திருமங்கலம், மன்னார்குடி,ஆவுடையார்கோவில், சாத்தூரில் தலா 4 மழை பெய்துள்ளது. ஆண்டிபட்டி, வத்திராயிருப்பு, அன்னுர், உள்ளிட்ட பல ஊர்களில் தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

இந்த நிலையில் இன்று நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு மே 9ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வறண்ட வானிலை

வறண்ட வானிலை மே 10ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தெற்கு கடலோர மாவட்டங்கள், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

எங்கு மழை பெய்யும் மே 11ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஒரு சில வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்

உள் மாவட்டங்கள் மே 12ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஒரு சில வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

கடலோர மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

சென்னையில் எப்படி மே 11 முதல் 13 வரை மேற்கு வடமேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூட்டும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

வெக்கை காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.