இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 50,040 ஆக உள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 2.7% அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் கரோனா பரவல் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் 48,698 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியிருந்தது.

ஒரே நாளில் 1258 பேர் பலியாகினர். உயிரிழப்பு விகிதம் 1.31% ஆக உள்ளது. அதேவேளையில், நோயிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கை 96.75% ஆக உள்ளது.

இதுவரை நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,02,33,183 ஆக அதிகரித்துள்ளது.

சற்றே ஆறுதல் தரும் விதமாக தொடர்ந்து 20வது நாளாக, பாசிட்டிவிட்டி ரேட் ( அதாவது 100 பேர் பரிசோதிக்கப்பட்டால் அதில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்ற விகிதம்) 5%க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாசிட்டிவிட்டி ரேட் 2.82% ஆக இருக்கிறது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,02,33,183

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 50,040.

இதுவரை குணமடைந்தோர்: 2,92,51,029

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 57,944

இதுவரை கரோனா உயிரிழப்புகள்: 3,95,751

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,258.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 5,86,403.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

32 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி:

நாடு முழுவதும் இதுவரை 32 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடப்படும் வேகத்தை அதிகரிக்கவும், அளவை விரிவுபடுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அதற்காக புதிய தடுப்பூசி திட்டம் 2021 ஜூன் 21ஆம் தேதி தொடங்கியது. அத்திட்டத்தின்படி, இன்று காலை 7 மணி வரை, 42, 79,210 அமர்வுகள் மூலம், 32,17,60,077 கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 64,25,893 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.