நாட்டில் போடப்பட்ட மொத்த கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று 13.54 கோடியைக் கடந்து விட்டது.

இன்று காலை . மணி வரை மொத்தம் 13,54,78,420 தடுப்பூசிகள் போடப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 31 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டன. 97வது நாளான நேற்று 31,47,782 தடுப்பூசிகள் போடப்பட்டன.

கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 75.01 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

Joe Biden COVID-19 vaccination plan: 100M shots in first 100 days

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 67,013 பேருக்கு நேற்று புதிதாக பாதிப்பு ஏற்பட்டது. அடுத்ததாக உத்தரப்பிரதேசத்தில் 34,254 பேருக்கு தொற்று ஏற்பட்டது. கேரளாவில் 26,995 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

12 மாநிலங்களில் கோவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 24,28,616-ஐ எட்டியுள்ளது.

நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,36,48,159-ஆக உள்ளது. இது தேசிய அளவில் 83.92 சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,93,279 பேர் குணமடைந்துள்ளனர். 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 81.79 சதவீதம் பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 568 பேரும், அடுத்ததாக டெல்லியில் 306 பேரும் நேற்று உயிரிழந்தனர்.