தமிழகத்தில் வெப்பச் சலனம், காற்றின் திசை வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக இன்றுசென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமானமழை பெய்யக்கூடும்.

29, 30-ம் தேதிகளில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியநீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 1-ம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, தென்காசி மாவட்டங்கள், அதை ஒட்டியஉள் மாவட்டங்களில் மிதமானமழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன்காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று தெரிவித்தார்.