பாலியல் புகாரில் சிக்கிய சிறப்புடிஜிபி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிஜே.கே.திரிபாதியை சந்தித்து, பெண்ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிறப்பு டிஜிபியாக இருந்தவர் மீதுபெண் எஸ்.பி. ஒருவர் பாலியல் புகார்கொடுத்துள்ளார். இதுகுறித்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. சிறப்பு டிஜிபி மீது பெண் வன்கொடுமைதடுப்புச் சட்டம், பெண்ணை மானபங்கப் படுத்துதல், சட்ட விரோதமாக தடுத்துநிறுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிப்பதற்கான விசாரணை அதிகாரியாக எஸ்.பி முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார். புகாரில் சிக்கிய அதிகாரியை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பெண்ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்து, டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். டிஜிபி ஜே.கே.திரிபாதியை சந்தித்த அவர்கள், “பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் அதிகாரியை தடுத்து நிறுத்திய காவல் துறை அதிகாரி மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்ய வேண்டும். புகார் கொடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. இதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.