தமிழகத்தில் புதிதாக 10.17 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிறப்பு முகாமில் 10 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் படி, “ வாக்காளர் பட்டியலில் புதிதாக 10.17 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3,12,26,750 பேர் ஆண்கள். 3,23,91,256 பேர் பெண்கள். 18 -19 வயதுள்ள 4,32,600 பேர் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மூன்றாம் பாலினத்தில் 7, 804 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளது.
சோழிங்கநல்லூரில் (7,11,755) அதிக வாக்காளர்களும், கீழ்வேளூரில் (1,78,517) குறைவான வாக்காளர்களும் உள்ளனர். புதுச்சேரியில் 10.10 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலை www.election.tn.gov.in என்ற இணைய பக்கத்தில் காணலாம்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.