பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்(Staff Selection Commission) அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்து செய்து சமர்ப்பிக்க நேற்று கடைசி நாளாக இருந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பன்னோக்குப் பணியாளர் – 10,880

ஹவில்தார் – 529

மொத்த காலிப்பணியிடங்கள் – 11,409

தகுதி:

2022 ஜனவரி 1ஆம் தேதியின்படி விண்ணப்பதாரர் 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.ssc.nic.in இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Apply’ என்கிற பொத்தானை அழுத்த வேண்டும். அங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, தேவையான ஆவணங்களைச் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி வெளியேறுங்கள். இணையவழி விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ.100ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள், பழங்குடியினர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

இணையவழியிலான இத்தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழிலும் தேர்வெழுத மத்திய பணியாளர் தேர்வாணையம் அனுமதித்துள்ளது. இத்தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு பின்னர் நடத்தப்படும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பங்களை பிப்ரவரி 24ஆம் தேதி இரவு 11 மணிக்குள் இணைய வழியில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

தேர்வு மையம்:

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் முதல்நிலைத் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர் தேர்வு எழுதுவதற்கு ஏதேனும் மூன்று தேர்வு மையங்களைத் தேர்வு செய்யலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

இணையவழி எழுத்துத் தேர்வு, உடற் தகுதி தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் பல முக்கியமான விவரங்களுக்கு:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_18012023.pdf என்கிற இணைப்பைப் பாருங்கள்.