நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 16,678 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,36,39,329ஆக உயர்ந்தது.
* புதிதாக 26 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,454 -ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 14,629 -பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,29,83,162 -ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.50% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.30% ஆக குறைந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,30,713 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
*இந்தியாவில் 1,98,88,77,537 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11,44,145 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.