இந்தியா மற்றும் சீன நாட்டு ராணுவ உயர் கமாண்டர் நிலையிலான அதிகாரிகள் பங்கேற்ற 17-வது சுற்றுப் பேச்சுவார்த்தை சீனத்தரப்பில் சுசுல் – மால்டோ எல்லைப் பகுதியில் டிசம்பர் 20 அன்று நடைபெற்றது.

கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில், மேற்குப் பகுதியின் எல்லைக்கோட்டில் நிலவும் சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

மேற்கு பகுதியில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பது என்று இருதரப்பினரும் அப்போது ஒப்புக்கொண்டனர். ராணுவம் மற்றும் தூதரக நிலையில், இருதரப்பும் தொடர்ந்து பேச்சுகளில் ஈடுபடுவது என்று அப்போது ஒப்புக்கொள்ளப்பட்டது என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.