1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நிகழாண்டு இறுதித் தேர்வு உறுதியாக நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் இன்று (ஏப்.3) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “நிகழ் ஆண்டு குறைந்த நாட்களே மாணவர்கள் பள்ளிக்கு வரும் சூழ்நிலை இருந்ததால், பாடத் திட்டத்திட்டம் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில்தான் தேர்வு நடைபெற உள்ளது.

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் இந்த ஆண்டு இறுதித் தேர்வு நிச்சயம் நடைபெறும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தேர்வு குறித்து இன்று மாலை அறிவிப்புகள் வெளியாகும். தமிழக முதல்வரின் டெல்லி பயணம் வெற்றி அடைந்துள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு சட்டப் போராட்டம் நடத்தி விலக்கு பெறுவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜூலை 17-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அதற்கான எல்லா ஹைடெக் பயிற்சிகளையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம்” என்று தெரிவித்தார்.