தூத்துக்குடி: திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் மாதந்தோறும் இருமுறை உண்டியல் எண்ணப்படுகிறது. கடந்த மாதம் 29-ம் தேதி உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதன் பின் மே மாதத்தில் 13 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இணை ஆணையர் கார்த்திக் தலைமை வகித்தார்.

தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலை வகித்தார். உதவி ஆணையர் சங்கர், அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்திரன், திருக்கோயில் ஆய்வாளர் செல்வநாயகி, சிவகாசி பதிணென் சித்தர் மடம் பீடம் குருகுல வேதபாடசாலை உழவார பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.

நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2,15,42,410 காணிக்கையாக கிடைத்தது. தங்கம் 1,190 கிராம், வெள்ளி 15,900 கிராம் கிடைத்தது. வெளிநாட்டு கரன்சிகள் 284 இருந்தன.