இந்த டெபிட் கார்டில், விபத்துக்கான காப்பீட்டை இலவசமாக பெறலாம்.

ஸ்டேட் பேங்கில் ஜன் தன் கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 2 லட்சம் வரை இலவச காப்பீட்டு சலுகைகளை பெற முடியும்.

ரூபே டெபிட் கார்டுகளுடன் ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையை எஸ்பிஐ வங்கி வழங்குகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு வெளியே விபத்து ஏற்பட்டாலும் காப்பீட்டுத் தொகையை பெற முடியும். மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜன் தன் கணக்குகளில் நிதியுதவிகள் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. அதே போல் சேமிப்பு கணக்குகள், காப்பீடு, பணம் அனுப்புதல், கடன் மற்றும் பிற வசதிகள் போன்ற நிதி சேவைகளும் இதில் வழங்கப்படுகின்றன. இந்த கணக்குகளைத் திறக்கும்போது வாடிக்கையாளர்கள் எந்தப் பணத்தையும் டெபாசிட் செய்யத் தேவையில்லை. மேலும் இந்த கணக்கு வைத்திருப்பவர்கள் ரூபே டெபிட் கார்டுகளையும் பெறுவார்கள்.

இவர்கள் தான் எஸ்பிஐ வழங்கும் இந்த 2 லட்சம் காப்பீடு தொகையை பெற தகுதியுடையவர்கள். இந்தியாவுக்கு வெளியே விபத்து ஏற்பட்டாலும் காப்பீட்டுத் தொகையை பெறலாம். இந்த விபத்துக்கான காப்பீடு தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான படிவத்தை நிரப்ப வேண்டும். அதற்கு முன்பு ஜன் தன் கணக்கில் பணப்பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளனவா? எனவும் ஆராயப்படும். விபத்துக்கு 90 நாட்களுக்கு முன்பு வரை பரிவர்த்தனை நடந்துள்ளதா? என  வங்கி அதிகாரிகள் செக் செய்வார்கள். ஒருவேலை இந்த காப்பீடு திட்டத்தில் நீங்கள் சேர வேண்டும் என்றால் எஸ்பிஐ வங்கியில் ஜன் தன் கணக்கு தொடங்க வேண்டும் அல்லது எஸ்பிஐ கணக்கை ஜன் தன் கணக்காக மாற்ற வேண்டும். இதில், ரூபே கார்டு வழங்கப்படுகின்றன. இந்த டெபிட் கார்டில், விபத்துக்கான காப்பீட்டை இலவசமாக பெறலாம்.

இந்த கணக்கை தொடங்க 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களும் வங்கிக் கணக்கு தொடங்கலாம். ஆனால் சேமிப்புக் கணக்கில் வருடத்திற்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே வைத்திருக்க இயலும். வங்கிக் கிளையில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதிலேயே ஏடிஎம் கார்டு, காசோலைப் புத்தகம், ஆன்லைன் பரிவர்த்தனை வசதி போன்றவற்றை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். விபத்துக்கான காப்பீடு தொகைக்கு விண்ணப்பிக்கும் போது படிவத்தில் கேட்கப்படும் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். பின்பு இந்திய ரூபாய் மதிப்பிலே காப்பீடு தொகை உங்களுக்கு வழங்கப்படும்.