தமிழ்நாடு முழுவதும் ஒரு மாதமாக கஞ்சா வேட்டையில் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து 3,562 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக குட்கா விற்பனை செய்த 6,319 பேரை போலீசார் கைது செய்தனர்.