ஒலிம்பிக் போட்டியில் 25 ஆண்டுகளுக்குப்பின் டென்னிஸ் ஆடவர் பிரிவில் முதல் வெற்றியை இந்தியா பெற்றுள்ளது.

டோக்கியோவில் நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீர்ர டெனிஸ் இஸ்டோமினை வீழ்த்தி இந்திய வீரர் சுமித் நகல் முத்திரை பதித்துள்ளார்

Sumit Nagal makes singles cut for Tokyo Olympics; AITA pairs him with  Bopanna, withdraws Sharan | Deccan Herald

ஒலிம்பிக்கில் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஒட்டுமொத்தமாக இந்திய வீரர்கள் பெறும் 3-வது வெற்றி இதுவாகும். இதற்கு முன், கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் லியாண்டர் பயஸ் பிரேசில் வீரர் ெபர்னான்டோ மெலிகினியை வென்றார்.

அதற்கு முன்பு கடந்த 1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்கில் பாராகுவே வீரர் விக்டோ கெபல்ரோவை தோற்கடித்திருந்தார் இந்திய வீரர் ஜீஷன் அலி.

ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக ஆடவர் ஒற்றையர் பிரிவி்ல் இந்திய வீரர் சுமித் நகல் வென்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர் இஸ்டோமினை 6-4, 6-7, 6-4 என்ற செட்களில் வீழ்த்தினால் சுமித் நாகல். இந்த ஆட்டம் 2 மணிநேரம் 34 நிமிடங்கள் நீடித்தது.

2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷியாவின் டேனில் மெத்வதேவை எதிர்கொள்கிறார் சுமித் நாகல். 2-வது சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தேறுவது நிச்சயம் கடினமான ஒன்றாகவே இருக்கும்.

கடந்த 1996ம் ஆண்டு லியாண்டர் பயஸ் வெற்றிக்குப்பின் இதுவரை எந்த இந்திய வீரரும் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் வென்றதில்லை. கடந்த 2012ம் ஆண்டு இந்திய வீரர்கள் சோம்தேவ் தேவ்வர்மன், விஷன் வர்தன் பங்ேகற்றாலும் முதல் சுற்றிலேயே வெளியேறினர்.

ரஷ்ய வீரர் மெத்மதேவ் தனது முதல் சுற்றில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்லிக்கை 6-4, 7-6, என்ற செட்களில் வீழ்த்தி 2-வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.