தெலங்கானா மாநிலம், ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம், சாய் நகர் பகுதியை சேர்ந்த பட்டுப்புடவை நெசவு தொழிலாளி விஜய். இவர் 27 வகையான நறுமணங்கள் வீசும் புதிய ரக பட்டுப்புடவையை தயாரித்துள்ளார்.

இந்த பட்டுப்புடவையை தெலங்கானா அமைச்சர்கள் கே. டி.ராமாராவ், ஹரீஷ் ராவ் ஆகியோர் ஹைதராபாத்தில் நேற்று பார்வையிட்டனர். பட்டுப்புடவையை பார்த்து வியந்த அவர்கள் அதனை
தயாரித்த விதம் குறித்து கேட்டறிந்தனர்.

இது குறித்து நெசவு தொழிலாளி விஜய் கூறியதாவது: இதற்கு அமைச்சர் கே.டி. ராமாராவ், ‘சிரி சந்தன பட்டு’ என பெயர் சூட்டியுள்ளார். இது எனக்கு மிக்க மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. மேலும் பல புதிய வகை பட்டுப்புடவைகளை அறிமுகப்படுத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நெசவு தொழிலாளி விஜய் தயாரித்த 27 வகை நறுமணம் வீசும் பட்டுப்புடவையை தெலங்கானா அமைச்சர்கள் கே.டி.ராமா ராவ், ஹரீஷ் ராவ் ஆகியோர் பார்வையிட்டனர்.