அடுத்த 30 ஆண்டுகளில் 10 ஜிகா டன் கரியமில வாயுவை ‘கார்பன் டை ஆக்சைடை) குறைக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு இருக்கிறது என்று நிதி ஆயோக் மற்றும் ஆர் எம் ஐ-யின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

அந்த அறிக்கையின் படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் எனும் அளவுக்கு சரக்கு போக்குவரத்து செலவை குறைத்தல், 10 ஜிகா டன் கரியமில வாயு வெளிப்பாட்டை 2020 முதல் 2050-ம் ஆண்டு வரை குறைத்தல், நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் பி எம் உமிழ்வை முறையே 35 மற்றும் 28 சதவீதம் அளவுக்கு 2050-ம் ஆண்டு வரை குறைத்தல் ஆகியவற்றுக்கான திறன் இந்தியாவுக்கு உண்டு.

ரூ 311 லட்சம் கோடி மதிப்பிலான சரக்கு போக்குவரத்துக்கு செலவிடும் எரிபொருளை 2020 முதல் 2050-ம் ஆண்டு வரை இந்தியா சேமிக்கலாம்.

“இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு சரக்கு போக்குவரத்து முதுகெலும்பாக விளங்குகிறது. இந்த அமைப்பை செலவு குறைவானதாக, திறன் மிக்கதாக மற்றும் தூய்மையானதாக மாற்றுவது அவசியமாகும்.

மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற அரசு திட்டங்களின் பலன்களை அடைவதில் திறன்மிகுந்த சரக்கு போக்குவரத்தும் முக்கிய பங்கை ஆற்றுகிறது,” என்று சுதேந்து ஜே சின்ஹா, ஆலோசகர், (போக்குவரத்து மற்றும் மின்சார போக்குவரத்து), நிதி ஆயோக், கூறினார்.

2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் சரக்கு போக்குவரத்து ஐந்து மடங்கு அதிகரித்து 400 மில்லியன் மக்கள் மாநகரங்களுக்கு இடம் பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒட்டுமொத்த அமைப்பையும் மாற்றியமைப்பது சரக்கு போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கும் உதவும்.

தீர்வுகள் பெரியளவில் செயல்படுத்தப்படும் போது, சரக்கு போக்குவரத்தில் புதுமைகளை புகுத்துவதிலும், செயல்திறனிலும் ஆசிய பசிபிக் பிராந்தியம் மற்றும் அதையும் தாண்டி முன்னணி இடத்தை இந்தியா அடைய அவை உதவும்.