Site icon Metro People

4 அமைச்சர்களின் இலாகா மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சரவை ஐ.பெரியசாமியுடம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.14) தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறையை அமைச்சர் மெய்யநாதனும், சிறப்பு திட்ட அமலாக்க துறையை முதல்வர் மு.க.ஸ்டாலினும் கவனித்து வந்தனர்.

4 அமைச்சர்களின் இலாகா மாற்றம்: மேலும் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், அமைச்சர் மதி வேந்தனுக்கு வனத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துச்சாமியிடம் இருந்து சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமும் அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version