மின் வாரிய ஊழியர்களுக்கு 2019 டிசம்பர் முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை விரைந்து வழங்கக் கோரி, ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். ஆனால், போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

இதுதொடர்பாக தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், 5 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க மின் வாரியம் ஒப்புக் கொண்டது. மேலும், ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தியுள்ளது. பொங்கல் பரிசாக ஓய்வூதியர்களுக்கு ரூ.500 வழங்கவும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, 5 சதவீத ஊதிய உயர்வு குறித்து மின்வாரியம் வழங்கியுள்ள கருத்துரு தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இதில், ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.