சென்னை: முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு டெக்ஸ்பீரியன்ஸ் என்ற இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் நிதித் தொழில்நுட்ப தத்தெடுப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் டெக்ஸ்பீரியன்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 70,000 கோடியில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ரூ.22,252 கோடி மதிப்பீட்டில் 21 தொழில் திட்டங்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.