திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை கொள்கை விளக்க குறிப்பில், திரைப்பட மற்றும் சின்னத்திரை துறையினருக்கான விருதுகள் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
விருதுகளை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ் நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் களுக்கான விடுபட்ட ஆண்டுகளுக்கும் மாணவர்கள் தயாரித்த குறும்படங்களை பார்வை யிட்டு சிறந்த குறும்படங்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
திருட்டு வீடியோ தடுப்பு பிரிவில் இந்த ஆண்டு 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் மொத்தம் 54 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.