தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை, போக்சோ வழக்குகளின் நிலை குறித்து முதலமைச்சர் கேட்டறிகிறார்.