நத்தம் அருகே கோபால்பட்டியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா நடைபெற்றது. இதில் விடிய விடிய கறி விருந்து பரிமாறப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கோபால்பட்டியில் சந்தன கருப்பு கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிற்கு ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா நேற்று (ஜூன் 9) இரவு நடைபெற்றது. விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. திருவிழாவில் பங்கேறே்ற ஏராளமான ஆண்களுக்கு இலை போட்டு சாதமும், ஆட்டுக்கறி குழம்பும் பிரசாதமாக பரிமாறப்பட்டது.

 

 

விடிய விடிய நடந்த திருவிழாவில் கோபால்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டும கலந்து கொண்டனர். ஆண்கள் மட்டுமே கலந்து இந்த விழா தற்போது நத்தம் பகுதியில் பேசும் பொருளாகி உள்ளது.