ஆவின் பால், காபி, டீத்தூள் ஆகியவற்றின் விலை உயர்வால் டீ, காபி ரூ.15 ஆக உயர்த்தப்படுகிறது என்று மாவட்ட காபி, டீ வர்த்தக சங்கச் செயலாளர் மீனாட்சி சுந்தரேஷ் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட காபி, டீ வர்த்தக சங்க ஆலோசனைக் கூட்டம் மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. அப்போது மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆவின் பால் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவின் பால் நிறுவனம் அரசு சேவை நிறுவனம். இதை தனியார் பால் நிறு வனங்களோடு ஒப்பிட்டு பால் விலையை உயர்த்துவதை ஏற்க முடியாது. ஆவின் பால் விலையைக் குறைக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரிய கடைகளில் தற்போது கூட ரூ.15-க்கு டீ, காபி விற்கப்படு கிறது. ஆனால், 80 சதவீதத்துக்கும் மேலான டீ கடைகளில் தற்போது ரூ.12-க்கு விற்கப்படுகிறது. தற் போது வேறு வழியின்றி மதுரை மாவட்டத்தில் காபி, டீ விலையை ரூ.3 உயர்த்தி 15 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினர்.