இன்றைக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் உலகில் எங்கிருந்தாலும், யாருடன் எளிதாகப் பேசும் வசதிகளை நமக்கு ஏற்படுத்தி தந்துள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக் என அடிக்கிக்கொண்டே போகலாம். ,எவ்வளவு வேகமாக தொழில்நுட்பங்கள் வளர்ச்சிப்பெறுகிறதோ? அந்தளவிற்கு அதன் மூலம் பாதிப்புகளையும் நாம் சந்தித்து வருகிறோம். சமீப காலங்களாக டிவிட்டர் போன்ற மைக்ரோ ப்ளாக்கிங் தளங்களில், தேவையற்ற தீவிரவாதக் கருத்துக்களை பரப்பும் தகவல்கள் உள்பட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தான் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு டிவிட்டர் நிறுவனம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியாவில் மே 2022ல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை பரப்பியதாக 43,656 கணக்குகளும், தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்புவது மற்றும் ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக 2,870 பயூசர்களின் கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் தடை செய்துள்ளது. மேலும் ஏப்ரல் 26, 2022 முதல் மே 25, 2022 வரை டிவிட்டரில் தேவையில்லாதக் கருத்துக்கள் வெளிவருவதாக இந்தியாவில் சுமார் 1,698 புகார்கள் வந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில் என்னென்ன மாதிரியான புகார்கள் என இங்கு தெரிந்துக்கொள்வோம்.

டிவிட்டரில் வெளியாகும் தகவல்கள் குறித்து வந்துள்ள பொதுவான புகார்களின் எண்ணிக்கை விபரங்கள்:

ஆன்லைனை துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக 1366 புகார்கள்

மக்கள் வெறுக்கத்தக்கும் வகையில் நடந்துக்கொள்ளுதல்- 111 புகார்கள்

இவ்வாறு பல்வேறு புகார்கள் வந்த நிலையில் தான், இதற்கான ஆதாரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட URLகள் மீது நடவடிக்கைகளை டிவிட்டர் நிறுவனம் எடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக டிவிட்டர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இத்தளத்தில் நாங்கள் அனைவரும் அனுப்பும் ஒவ்வொரு கருத்துகளையும் வரவேற்கிறோம். ஆனால் இக்கருத்துக்கள் மற்றவர்களுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் மனிதாபிமானமற்ற செயல்களை நாங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.

 

டிவிட்டரை போன்று கூகுள் நிறுவனமும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் தீவிரவாதக் கருத்துக்களை பரப்புவதாக 393,303 உள்ளடங்களை நீக்கியுள்ளது. இதே போன்று வாட்ஸ்அப் நிறுவனமும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் கீழ், 5 மில்லியனுக்கும் அதிகமான புகார்கள்களை கொண்ட பெரிய டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களில் என்ன நடக்கிறது? எது மாதிரியான புகார்கள் வந்துள்ளது? என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பது குறித்து மாதாந்திர அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று உள்ளது. இதன் அடிப்படையில் தான் அனைத்து நடவடிக்கைகளையும் தற்போது டிஜிட்டல் தளங்கள் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.