தெலுங்கு திரையுலகின் நடிகர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு பிரகாஷ் ராஜ் போட்டியிடுகிறார்.

நடிகர்களில் பிரகாஷ் ராஜ் வித்தியாசமானவர். ஒருபக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் இயற்கை, விவசாய பண்ணை என்று இருப்பவர்.

தனது நண்பர் கௌரி லங்கேஷின் படுகொலைக்குப் பிறகு அரசியல் கருத்துகளை துணிச்சலாக முன் வைத்து வருகிறார். குறிப்பாக ஜஸ்ட் ஆஸ்கிங் என்ற ஹேஷ் டேக்கில் மோடி அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதில் முதல் ஆளாக உள்ளார்.

தெலுங்கு திரையுலகின் நடிகர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு பிரகாஷ் ராஜ் போட்டியிடுகிறார். அதற்கான வேலைகளில் கடந்தவாரம் வரை பிஸியாக இருந்தவர், மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்னா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு ஜேசிபி பரிசளித்தார். பிரகாஷ் ராஜ் பவுண்டேஷன் சார்பாக இந்த உதவியை அவர் செய்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். ஹரியின் யானை படத்தில் அருண் விஜய்யின் அண்ணனாக முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் தனது 11-ம் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம் மற்றும் நடிகர் சங்கத் தேர்தலில் பிஸியாக இருந்ததால், அவரால் யானை படத்துக்கு கால்ஷீட் தர முடியவில்லை. அதனால், அவருக்குப் பதில் சமுத்திரகனியை நடிக்க வைத்தார் ஹரி. ரஜினியின் அண்ணாத்த படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நவம்பர் 4 படம் திரைக்கு வருகிறது.