பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சல்மான் கான் நலமாக உள்ளதாக ட்விட்டரில் தகவல் அளித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஒரு பாம்பு என் பண்ணை வீட்டில் நுழைந்தது, நான் அதை ஒரு குச்சியைப் பயன்படுத்தி வெளியே எடுத்தேன். அது என்னை மூன்று முறை கடித்தது. அது ஒரு வகையான விஷப்பாம்பு. 6 மணி நேரம் மருத்துவமனையில் இருந்தேன்; இப்போது நலமாக இருக்கிறேன்,’ என்றார்.