சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார், கே.முரளிசங்கர், ஆர்.என். மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்கவுள்ளனர்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்பு உறுதிமொழி செய்து வைக்கவுள்ளார். இவர்கள் 9 பேரும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றனர். நாளை பதவியேற்க உள்ள நீதிபதிகள் எஸ்.ஆனந்தி மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடுத்த மாதம் பணி ஓய்வு பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.