நடிகர் அஜித் வெளிநாட்டுப் பயணம் முடித்து தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில், ‘ஏகே 62’ அப்டேட் விரைவில் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உட்பட பலரும் நடித்திருந்த ‘துணிவு’ படம் கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியானது. தற்போது படம் ஓடிடி நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் வெளியாகி உலக அளவில் 5 இடங்களுக்குள் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
‘துணிவு’ படம் வெளியானதும் நடிகர் அஜித் தன் குடும்பத்துடன் ஸ்காட்லாந்து சென்றிருந்தார். தற்போது அஜித் ஸ்காட்லாந்தில் இருந்து சென்னைக்குத் திரும்பியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சென்னை விமானநிலையத்தில் நடிகர் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அஜித் சென்னை திரும்பி இருப்பதால், அவர் தனது அடுத்தப் படமான ‘ஏகே 62’ படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.