எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு நேற்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் மரியாதையுடன் பார்க்கக் கூடிய தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி எல்லைகள் கடந்து அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தியவர்.

மாணவர்களுக்கு அவர் படிப்புடன் சத்துணவும் கொடுத்தார். சிறந்த ஆட்சியாளர், எங்களது திருமணத்தை நடத்தி வைத்தவர். மேலும் எம்.ஜி.ஆர் நல்ல கனவோடு கட்சி நடத்தி வந்தார். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து, ஆளுநராக சொல்லவில்லை. இவ்வாறு தமிழிசை கூறினார்.