பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் கடந்த 2006ம் ஆண்டு, தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து ‘உணவு பொருட்கள் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பொது சுகாதாரம் ஆகியவற்றின் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய உணவு பாதுகாப்பு ஆணையருக்கு புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க அதிகாரம் இல்லை.

எனவே, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்பு ஆணையரின் அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்படும் என திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்தார்.