சென்னை அம்பேத்கர் சட்டப்பல்லைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதா கடந்த வாரம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிதாக அமைய உள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் இருக்கும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் சென்னை அம்பேத்கர் சட்டப்பல்லைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கேள்வி நேரம் முடிந்த அம்பேத்கர் சட்டப்பல்லைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.